உலகக் கோப்பை தோல்வி எதிரொலி: தேர்வுக்குழுவை நீக்கிய பிசிசிஐ!

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்குப் புதிய தேர்வுக்குழுவை நியமிக்க முன்வந்துள்ளது பிசிசிஐ. இதுகுறித்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
உலகக் கோப்பை தோல்வி எதிரொலி: தேர்வுக்குழுவை நீக்கிய பிசிசிஐ!

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்குப் புதிய தேர்வுக்குழுவை நியமிக்க முன்வந்துள்ளது பிசிசிஐ. இதுகுறித்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என இரண்டிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. இதனால் தற்போது தேர்வுக்குழுத் தலைவராக உள்ள சேதன் சர்மா மற்றும் அவருடைய குழுவினர் நீக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 7 டெஸ்டுகள் அல்லது 30 முதல்தர ஆட்டங்கள் அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல்தர ஆட்டங்களில் விளையாடியிருக்க வேண்டும், குறைந்தபட்சம் 5 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று இதற்கான விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நவம்பர் 28-க்குள் அனுப்பப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com