கால்பந்து உலகக் கோப்பை: மைதானங்களில் பீர் விற்கத் தடை

கத்தாரில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் மைதானங்களில் பீர் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஃபிஃபா தலைவர்
ஃபிஃபா தலைவர்

கத்தாரில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் மைதானங்களில் பீர் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2022 கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தோஹாவைச் சுற்றியுள்ள 8 மைதானங்கள் இப்போட்டிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. ஃபிஃபா 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018-ல் ரஷியாவில் முதல்முறையாக நடைபெற்றது. தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றது. குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் பெற்றுள்ளன. இப்போட்டியில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறும் மைதானங்களில் பீர் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடான கத்தாரில் பொது இடங்களில் மது அருந்த அனுமதி கிடையாது. ஃபிபாவுக்கு பட்வைஸர் விளம்பரதாரராக உள்ளதால் அந்நிறுவனத்தின் தயாரிப்பு பீர்களை மைதானங்களில் வழங்க முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கத்தார் அரசின் விதிமுறை காரணமாக மைதானங்களில் பீர் விற்கப்படாது என ஃபிஃபாவும் அறிவித்துள்ளது. போட்டியின்போது ரசிகர்களுக்கு பீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என கத்தார் அரசு முதலில் உறுதியளித்த நிலையில் இந்த அறிவிப்பு சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இங்கிலாந்து கால்பந்து ஆதரவாளர்கள் சங்கம், ஃபிஃபாவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சில ரசிகர்கள் ஆட்டத்தின்போது பீர் அருந்த விரும்புவார்கள். கடைசி நேரத்தில் வேறு முடிவு எடுத்திருப்பதுதான் பிரச்னை என்று தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. 

கால்பந்து உலகக் கோப்பையைக் காண உலகெங்கிலும் இருந்து 12 லட்சம் வருகை தருவார்கள் என கத்தார் அரசு மதிப்பிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com