இரு புதிய கேப்டன்களுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஒருநாள் ஆட்டம்!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் சிட்னியில் நடைபெற்று வருகிறது.
ஹேஸில்வுட் (கோப்புப் படம்)
ஹேஸில்வுட் (கோப்புப் படம்)

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி எளிதாக வென்றது.

ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸுக்கு ஓய்வு அளிக்கும்விதமாக இந்த ஆட்டத்தில் ஆஸி. அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஹேஸில்வுட் களமிறங்கினார். அவர் இதற்கு முன்பு எந்தவொரு ஆட்டத்திலும் கேப்டனாக இருந்ததில்லை. எனினும் சமீபத்தில் ஆஸி. கேப்டனாகச் செயல்பட்ட ஸ்மித், அலெக்ஸ் கேரிக்குப் பதிலாக ஹேஸில்வுட் கேப்டனாகத் தேர்வாகியிருப்பது ஆச்சர்யத்தை அளித்துள்ளது. அதேபோல இங்கிலாந்து அணியின் கேப்டனாக பட்லருக்குப் பதிலாக மொயீன் அலி செயல்படுகிறார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து என இரு பெரிய அணிகள் மோதும் ஆட்டத்திலேயே வழக்கமான கேப்டன்கள் ஓய்வெடுத்து புதிய கேப்டன்களை நியமித்திருப்பது கிரிக்கெட்டின் புதிய நடைமுறையை உணர்த்துவதாகவே உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com