சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

டி20 உலகக் கோப்பையில் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? ராகுல் டிராவிட் பதில்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக் கோப்பையில் இடம்பெறுவாரா மாட்டாரா என்பது குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார்.

Published On :

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக் கோப்பையில் இடம்பெறுவாரா மாட்டாரா என்பது குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார்.

இந்த மாதம் டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. ஆசியக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதனையடுத்து, தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளது இந்திய அணிக்கு மட்டுமில்லாமல் இந்திய அணியின் ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இருந்து பும்ரா விலகிய நிலையில் அவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. 

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் பும்ரா இடம் பெறுவது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராட் பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நாளை (அக்டோபர் 2) நடைபெறும் நிலையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

பும்ரா குறித்து ராகுல் டிராவிட் கூறியதாவது: “ நாங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இருந்து பும்ரா முழுவதுமாக விலகியுள்ளது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனால், அடுத்த சில நாட்களுக்கு நாங்கள் காத்திருந்து அவரது உடல் நிலை குறித்து கவனிக்க உள்ளோம். சாதாரணமாக வீரர் ஒருவர் முதுகில் காயத்தினால் அவதிப்படும்போது அதிலிருந்து குணமடைந்து திரும்ப 6 மாதங்கள் தேவைப்படும். இருப்பினும், பும்ரா குணமடைந்து அணிக்கு விரைவில் திரும்புவார் என நம்புகிறோம். நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் அவரது காயம் எந்த அளவிற்கு உள்ளது என்பது தெரியவில்லை. நாங்கள் எப்போதும் அவரது சிறப்பான பங்களிப்பை அணிக்குத் தர வேண்டும் என விரும்புகிறோம்.” என்றார்.

ஏற்கனவே இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய நிலையில், பும்ரா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் அணியில் இடம் பெறும் வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.