கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

பயிற்சி ஆட்டத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணி!

மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

News image

அர்ஷ்தீப் சிங்

Updated On :10 அக்டோபர் 2022, 4:53 pm IST

மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. உலகக் கோப்பைப் போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி நான்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரு பயிற்சி ஆட்டங்களிலும் அக்டோபர் 17 அன்று ஆஸ்திரேலியா, அக்டோபர் 19 அன்று நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக காபா மைதானத்திலும் இந்திய அணி விளையாடவுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சூர்யகுமார்  யாதவ் 52 (35 பந்துகள், 3x4, 3x6), பாண்டியா 29 (20) ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இதன்பிறகு பேட்டிங் செய்த மேற்கு ஆஸ்திரேலியா, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி இந்தப் பயிற்சி ஆட்டத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் சஹால், புவனேஸ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். ஃபேனிங் அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.