தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சையத் முஷ்டாக் அலி போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் எப்படி விளையாடுகிறார்?

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார் அர்ஜுன் டெண்டுல்கர்.

News image
Updated On :12 அக்டோபர் 2022, 4:51 pm IST

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார் அர்ஜுன் டெண்டுல்கர்.

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனும் இடது கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜுன் டெண்டுல்கர், 2021-ம் வருடம் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான மும்பை அணியில் இடம்பெற்றார். அர்ஜுன் விளையாடிய இரு ஆட்டங்களிலும் மும்பை அணிக்குத் தோல்வியே கிடைத்தன. ஹரியாணாவுக்கு எதிராக 1/34, புதுச்சேரிக்கு எதிராக 1/33 என சுமாராகவே பந்துவீசினார். இதன்பிறகு ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, அர்ஜுனை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஓர் ஆட்டத்திலும் விளையாட முடியாமல் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார். இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகப் பணியாற்றியுள்ள அர்ஜுன், இந்திய யு-19 அணிக்காகவும் விளையாடியுள்ளார். 

கடந்த வருடம் மும்பை ரஞ்சி அணியிலும் இடம்பிடித்தார். 2022 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 30 லட்சத்துக்கு அர்ஜுனை மீண்டும் தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன்பிறகு மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்கு மாறினார் அர்ஜுன். மும்பை அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் அணி மாறினார்.

இந்நிலையில் நேற்று முதல் தொடங்கியுள்ள சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் கோவா அணிக்காக விளையாடி வரும் 23 வயது அர்ஜுன் டெண்டுல்கர், முதல் இரு ஆட்டங்களிலும் நன்றாகப் பந்துவீசியுள்ளார். திரிபுராவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 3 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 20 ரன்கள் கொடுத்தார். இன்று மணிப்பூருக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். இரு ஆட்டங்களிலும் கோவா வெற்றி பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.