/

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடித்த வீரர்!

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பிரபல தென்னாப்பிரிக்க வீரர் டுவைன் பிரிடோரியஸ் விலகியதையடுத்து...

News image
Updated On :12 அக்டோபர் 2022, 3:54 pm IST

காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பிரபல தென்னாப்பிரிக்க வீரர் டுவைன் பிரிடோரியஸ் விலகியதையடுத்து மார்கோ யான்சென் தேர்வாகியுள்ளார்.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதற்கான தென்னாப்பிரிக்க அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

டி20 உலகக் கோப்பையிலிருந்து பிரபல தெ.ஆ. ஆல்ரவுண்டர் டுவைன் பிரிடோரியஸ் சமீபத்தில் விலகினார். இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தின்போது இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், டி20 உலகக் கோப்பை என இரண்டிலிருந்தும் விலகினார். 

இந்நிலையில் தெ.ஆ. டி20 உலகக் கோப்பை அணியில் பிரிடோரியஸுக்குப் பதிலாக மார்கோ யான்சென் தேர்வாகியுள்ளார். இதையடுத்து மாற்று வீரர்களில் ஒருவராக இருந்த யான்செனுக்குப் பதிலாக லிஸாட் வில்லியம்ஸ் தேர்வாகியுள்ளார். 

இந்தியாவுக்கு எதிராகக் கடந்த ஜூன் மாதம் டி20 கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். இதுவரை ஒரு சர்வதேச டி20 ஆட்டத்தில் மட்டுமே விளையாடியுள்ளார். 

டி20 உலகக் கோப்பையில் தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணிக்கு எதிராக அக்டோபர் 24 அன்று தனது முதல் ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா விளையாடவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.