‘இந்த நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்’- நமீபியா அணியின் கேப்டன் நெகிழ்ச்சி! 

டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இலங்கையை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நமீபியா அணி.  
‘இந்த நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்’- நமீபியா அணியின் கேப்டன் நெகிழ்ச்சி! 

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் சௌத் கீலாங்ஸ் மைதானத்தில் தொடங்கியது.  குரூப் ஏ பிரிவு முதல் ஆட்டத்தில் இலங்கை - நமீபிய அணிகள் மோதியது.  

நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் நமிபீயா அணி 163 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது. அடுத்து ஆடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 108 ரன்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்தது.

இது குறித்து நமீபியா அணியின் கேப்டன் எராஸ்மஸ் கூறியதாவது: 

கடந்தாண்டு எங்களுக்கு சிறப்பான அனுபவமாக அமைந்தது. இந்த முறை தொடக்கமே சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் நிறைய வேலைகள் இன்னும் இருக்கிறது. இந்த நாள் வரலாற்று சிறப்புமிக்க நாளாகும். ஆனால் இந்த வெற்றியை தொடக்கமாக கருதி சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெற வேண்டும். இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் எங்களது பயிற்சியாளர் (டீ ப்ரூயின்) ஆவார். குறைவான பொருளாதாரத்தை வைத்துக் கொண்டு இந்த அணியை வழிநடத்துகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com