சையத் முஷ்டாக் அலி: அதிக ரன்கள் எடுத்துள்ள சிஎஸ்கே வீரர்
By DIN | Published On : 19th October 2022 10:44 AM | Last Updated : 19th October 2022 10:44 AM | அ+அ அ- |

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் மஹாராஷ்டிர அணி வீரரும் சிஎஸ்கேவின் முக்கிய பேட்டருமான ருதுராஜ் கெயிக்வாட் அதிக ரன்கள் எடுத்து நன்கு விளையாடி வருகிறார்.
2022 சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை பெரும்பாலான அணிகள் தலா 5 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. தமிழக அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றுள்ளது.
அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மஹாராஷ்டிர கேப்டனும் சிஎஸ்கே அணியின் முக்கிய பேட்டருமான ருதுராஜ் கெயிக்வாட் சிறப்பாக விளையாடி முதலிடத்தில் உள்ளார். 4 ஆட்டங்களில் 2 சதங்கள் எடுத்துள்ளார்.
சையத் முஷ்டாக் அலி கோப்பை: அதிக ரன்கள் எடுத்த பேட்டர்கள்
ருதுராஜ் கெயிக்வாட் - 276 (69 சராசரி & 151.6 ஸ்டிரைக் ரேட்)
பிருத்வி ஷா - 269 (67.2 சராசரி & 196.3 ஸ்டிரைக் ரேட்)
திலக் வர்மா - 249 (49.8 சராசரி & 137.5 ஸ்டிரைக் ரேட்)
யாஷ் துல் - 245 (81.6 சராசரி & 145.8 ஸ்டிரைக் ரேட்)
தமிழக வீரர்களில் சாய் சுதர்சன் அதிகபட்சமாக 5 ஆட்டங்களில் 1 அரை சதத்துடன் 159 ரன்கள் எடுத்துள்ளார்.