முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

டிஆர்எஸ் முறையீடு செய்யாமல் வீணாக விக்கெட்டைப் பறிகொடுத்த கே.எல். ராகுல்!

ராகுல் செய்த தவறை ரோஹித் சர்மா செய்யவில்லை.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 1:47 pm IST

டிஆர்எஸ் முறையீடு செய்யாமல் தனது விக்கெட்டை வீணாகப் பறிகொடுத்தார் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல்.

முதல் ஆட்டத்தில் பரபரப்பான முறையில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி, நெதர்லாந்துக்கு எதிராக சிட்னியில் இன்று விளையாடுகிறது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த ரோஹித் சர்மா இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை என்று அறிவித்தார்.  இதனால் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்களான அஸ்வினும் தினேஷ் கார்த்திக்கும் இன்றைய ஆட்டத்திலும் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்து அணியிலும் எவ்வித மாற்றமும் இல்லை என அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்தார்.

முதல்முறையாக டி20 சர்வதேச ஆட்டத்தில் இந்தியாவும் நெதர்லாந்தும் மோதுகின்றன. சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்றுள்ள ஒரே அசோசியேட் அணியான நெதர்லாந்து, முதல் ஆட்டத்தில் நூலிழையில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது. 

3-வது ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் கே.எல். ராகுல். இதற்கு டிஆர்எஸ் முறையீடு கேட்கலாமா என ரோஹித் சர்மாவிடம் விவாதித்தார் ராகுல். ஆனால் தேவையில்லை என அவர் சொன்னதால் ஓய்வறைக்குத் திரும்பினார் ராகுல். ஆனால் லெக் ஸ்டம்பைப் பந்து தவறவிட்டது பிறகு தெரிய வந்தது. இதனால் ராகுல், டிஆர்எஸ் முறையீடு கோரியிருந்தால் நிச்சயம் ஆட்டமிழக்காமல் இருந்திருப்பார்.

ராகுல் செய்த தவறை ரோஹித் சர்மா செய்யவில்லை. 27 ரன்களில் அவர் இருந்தபோது வான் பீக் வீசிய பந்து காலில் பட்டது. இதை எல்பிடபிள்யூ என அறிவித்தார் நடுவர். எனினும் டிஆர்எஸ் முறையீடு கோரினார் ரோஹித் சர்மா. இதில் பந்து, மட்டையில் பட்டு பிறகு கால்காப்பில் பட்டது தெரியவந்ததால் நடுவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். 39 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா.

இந்திய அணி 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.