யு.எஸ். ஓபன்: நடாலை வீழ்த்திய டியாஃபோ அரையிறுதிக்குத் தகுதி

யு. எஸ். ஓபன் போட்டியில் 4-வது சுற்றில் பிரபல வீரர் நடாலை வீழ்த்திய அமெரிக்க வீரரான டியாஃபோ அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
யு.எஸ். ஓபன்: நடாலை வீழ்த்திய டியாஃபோ அரையிறுதிக்குத் தகுதி

யு. எஸ். ஓபன் போட்டியில் 4-வது சுற்றில் பிரபல வீரர் நடாலை வீழ்த்திய அமெரிக்க வீரரான டியாஃபோ அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

24 வயது ஃபிரான்சஸ் டியாஃபோ நடாலை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்தார். 2005-க்குப் பிறகு காலிறுதியில் நடால், ஃபெடரர், ஜோகோவிச் இல்லாமல் நடைபெறும் 2-வது யு.எஸ். ஓபன் போட்டி இது. 2020 போட்டியிலும் இதுபோல இம்மூவரும் காலிறுதியில் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில் காலிறுதிச் சுற்றில் ஆண்ட்ரே ருப்லேவை 7-6 (3), 7-6 (0), 6-4  என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் டியாஃபோ. இதன்மூலம் யு.எஸ். ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2006-க்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 2006-ல் அமெரிக்காவின் ஆண்டி ரோடிக் அரையிறுதில் ஃபெடரரிடம் தோற்றார். மேலும் ஆடவர் பிரிவில் கடைசியாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அமெரிக்க வீரரும் ஆண்டி ரோடிக் தான். 2003-ல் யு.எஸ். ஓபன் பட்டம் வென்றார். அதன்பிறகு நடைபெற்ற 74 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் எந்தவொரு அமெரிக்க வீரரும் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com