சென்னை துலீப் கோப்பை: ஜெயிஸ்வால் இரட்டைச் சதம், ரஹானே சதம்
By DIN | Published On : 09th September 2022 03:05 PM | Last Updated : 09th September 2022 03:05 PM | அ+அ அ- |

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ரஹானே, துலீப் கோப்பை ஆட்டத்தில் சதமடித்துள்ளார்.
பிரபல வீரர் ரஹானே, ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்டுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதன்பிறகு காயமடைந்ததால் சமீபகாலமாக அவர் விளையாடாவில்லை. இந்நிலையில் துலீப் கோப்பைப் போட்டியில் மேற்கு மண்டல அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் ரஹானே.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் வட கிழக்கு மண்டலத்துக்கு எதிரான துலீப் கோப்பை ஆட்டத்தில் ரஹானே சதமடித்துள்ளார். தொடக்க வீரர் ஜெயிஸ்வால் இரட்டைச் சதம் எடுத்துள்ளார். மேற்கு மண்டல அணி 100 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 466 ரன்கள் எடுத்துள்ளது. பிருத்வி ஷா 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜெயிஸ்வால் 205, ரஹானே 137 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.