இங்கிலாந்து - தெ.ஆ. டெஸ்ட்: கைவிடப்பட்ட 2-ம் நாள் ஆட்டம்!

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்டின் 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது. 
இங்கிலாந்து - தெ.ஆ. டெஸ்ட்: கைவிடப்பட்ட 2-ம் நாள் ஆட்டம்!

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்டின் 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா். அவருக்கு வயது 96. அவரது மறைவுக்கு உலகத் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். தனது தந்தை ஆறாம் ஜாா்ஜ் மறைவைத் தொடா்ந்து, 1952-இல் அரியணையேறிய இரண்டாம் எலிசபெத், சாதனை அளவாக 70 ஆண்டுகள் அரசியாக இருந்தாா். அவரது ஆட்சிக் காலத்தில் 15 பிரிட்டன் பிரதமா்களை அவா் நிா்வகித்துள்ளாா்.

எலிசபெத் மறைவு காரணமாக லண்டனில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்டின் 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. டெஸ்ட் குறித்த அடுத்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 3-வது டெஸ்ட் தொடர்ந்து நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஆகிய இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து முடிவெடுக்கவுள்ளன. 

டெஸ்ட் தொடர் 1-1 எனத் தற்போது சமனில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com