ரஞ்சி வீரரைத் திருமணம் செய்யவுள்ள பிரபல வீராங்கனை (படங்கள்)
By DIN | Published On : 12th September 2022 04:58 PM | Last Updated : 12th September 2022 04:58 PM | அ+அ அ- |

படம் - www.instagram.com/arjunhoysala/
பிரபல கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்திக்கு விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.
29 வயது வேதா கிருஷ்ணமூர்த்தி இந்திய அணிக்காக 2011 முதல் 2020 வரை 48 ஒருநாள், 76 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இரு உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றார். சமீபத்தில் கரோனா பாதிப்பால் தனது தாய் மற்றும் சகோதரியை இழந்தார். இந்திய அணியில் தற்போது வேதாவுக்கு இடமளிக்கப்படவில்லை. அதனால் இந்திய அணியில் மீண்டும் இடம்பெற தீவிர முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த வேதா, மற்றொரு கிரிக்கெட் வீரரான அர்ஜுனை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். கர்நாடக ரஞ்சி அணியில் அர்ஜுன் விளையாடியுள்ளார்.
அவர் சம்மதம் தெரிவித்து விட்டார் என்று தனது காதலுக்கு வேதா சம்மதம் கூறிய புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் அர்ஜுன்.
வேதா - அர்ஜுனின் திருமண நிச்சயதார்த்தம் பெங்களூரில் செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ளது.