கிரிக்கெட் ஆஸ்திரேலியா நினைத்தால் நான் கேப்டனாகலாம்: டேவிட் வார்னர்

நான் கேப்டனாவது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவிலே உள்ளதென  ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர் டேவிட் வார்னர் கூறியுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

நான் கேப்டனாவது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவிலே உள்ளதென  ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர் டேவிட் வார்னர் கூறியுள்ளார். 

ஆஸ்திரேலியாவின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆரோன் பின்ச் ஓய்வை அறிவித்த பிறகு அடுத்த கேப்டனாக யார் பொறுப்பேற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

2018இல் கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதற்காக வார்னர், ஸ்மித், பென்கிராப்ட் ஆகியோர் மீது கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுத்தது. வார்னருக்கு கேபட்னாக வாழ்நாள் தடையும் ஸ்மித்க்கு ஒரு வருடம் தடையும் விதித்தது. 

அக்டோப்ட 2 முதல் டி20 உலக கோப்பை தொடங்க இருப்பது குறிப்பிட்டத்தக்கது. கேப்டன்ஷிப் விவகாரம் குறித்து வார்னர் கூறியதாவது:

எனக்கு பக்கத்தில் உள்ள டேஸ்ட் கேப்டன் அவருக்குதான் முதல் வாய்ப்பு. என்னுடைய அலைபேசி பக்கத்திலேயேதான் இருக்கிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா கேப்டன் பற்றி எதாவது கேட்டால் உடனே பதிலளிக்க ஆவலாக இருக்கிறேன். கடந்த காலத்தில் செய்தது அத்துடன் முடிந்துவிட்டது. நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய சிறந்த ஆட்டத்தை அணிக்காக கொடுக்க எப்போதும் முயற்சித்து வருகிறேன். 

நான் கேப்டனாக வேண்டுமென கிரிக்கெட் ஆஸ்திரேலியா நினைத்தால் அது எனக்கு கௌரவும். அது அவர்கள் கையிலே உள்ளது. நான் இப்போது என்னால் பேட்டிங்கில் எவ்வளவு ரன்களை குவிக்க முடியுமோ அதில் மட்டுமே கவனம்  செலுத்தி வருகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com