சென்னை ஓபன் பட்டம் வென்ற 17 வயது லிண்டா: படங்கள்

சாம்பியன் பட்டம் வென்ற லிண்டா, தரவரிசையில் 74-வது இடத்துக்கு முன்னேறினார்.
சென்னை ஓபன் பட்டம் வென்ற 17 வயது லிண்டா: படங்கள்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டி ஒற்றையா் பிரிவில் செக். குடியரசைச் சோ்ந்த 17 வயது இளம் வீராங்கனை லிண்டா ஃபுருவிா்டோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 

தமிழக அரசு, டிஎன்டிஏ, டபிள்யுடிஏ இணைந்து நடத்திய இப்போட்டியின் இறுதிச்சுற்று நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் 4-6, 6-3, 6-4 என வெற்றி பெற்றார் லிண்டா. 

லிண்டா ஃபுருவிா்டோவா வென்ற முதல் டபிள்யுடிஏ சாம்பியன் பட்டம் சென்னை ஓபன் ஆகும். முதல்வா் மு.க. ஸ்டாலின் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு கோப்பையை வழங்கினாா். சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு ரூ. 26 லட்சமும், 2-வது இடம் பெற்ற மகதா லினேட்டுக்கு ரூ.15.7 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டன. சாம்பியன் பட்டம் வென்ற லிண்டா, தரவரிசையில் 74-வது இடத்துக்கு முன்னேறினார். இதன்மூலம் தரவரிசையில் இடம்பெற்றுள்ள முதல் 100 வீராங்கனைகளில் குறைந்த வயது கொண்ட வீராங்கனை என்கிற பெருமையை லிண்டா அடைந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com