உமேஷ் யாதவுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பது ஏன்?: ரோஹித் சர்மா பதில்

இந்திய டி20 அணியில் ஷமி, உமேஷ் யாதவ் போன்ற மூத்த வீரர்களைத் தேர்வு செய்தது குறித்து ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
உமேஷ் யாதவுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பது ஏன்?: ரோஹித் சர்மா பதில்

இந்திய டி20 அணியில் ஷமி, உமேஷ் யாதவ் போன்ற மூத்த வீரர்களைத் தேர்வு செய்தது குறித்து ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டி20 ஆட்டம் மொஹலியில் நாளை நடைபெறுகிறது. மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஷமி, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

சமீபகாலமாக இந்திய டி20 அணியில் ஏராளமான இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றார்கள். இந்நிலையில் ஷமி, உமேஷ் யாதவ் போன்ற மூத்த வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படுவது பற்றி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒரு பேட்டியில் கூறியதாவது:

உமேஷ் யாதவை அணியில் சேர்த்தது குறித்து சரியான பதிலை அளிக்கிறேன். ஷமிக்குப் பதிலாக யாரைத் தேர்வு செய்யலாம் என்பது பற்றி எங்களிடம் சில தெரிவுகள் இருந்தன. பிரசித் கிருஷ்ணாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. சிராஜ் கவுன்டி ஆட்டங்களில் விளையாடுகிறார். ஒரு சில ஆட்டங்களுக்காக அவரை இங்கிலாந்திலிருந்து வர வைக்க முடியாது. அது நியாயமாக இருக்காது. ஆசியக் கோப்பைப் போட்டியில் அவேஷ் கானுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வர அவருக்கு இன்னும் சில காலம் ஆகும். இப்போதைக்கு அவரால் நல்ல உடற்தகுதியுடன் பந்துவீச முடியாது. ஷமியும் உமேஷ் யாதவும் நல்ல உடற்தகுதியுடன் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் அணியில் விளையாட அழைக்கப்படுவார்கள். ஐபிஎல் போட்டியில் உமேஷ் எப்படிச் சிறப்பாகப் பந்துவீசினார் எனப் பார்த்தோம். எனவே அவரைத் தேர்வு செய்வது சுலபமாக இருந்தது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com