இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 ஆட்டத்துக்கான டிக்கெட்டுகளை வாங்க வந்த ரசிகர்கள் சிலர், காவலர்களின் தடியடியில் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மொஹலியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி வென்றது. வரும் ஞாயிறன்று ஹைதராபாத்தில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 ஆட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் ஜிம்கானா மைதானத்தில் விற்கப்படும் டிக்கெட்டுகளை வாங்க இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தார்கள். 3,000 டிக்கெட்டுகளை வாங்க 30,000 ரசிகர்கள் திரண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க காவலர்கள் தடியடி நடத்தியதில் சில ரசிகர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.