கேப்டன் அபார சதம்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாதனை (ஹைலைட்ஸ் விடியோ)

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.
கேப்டன்  அபார சதம்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாதனை (ஹைலைட்ஸ் விடியோ)


இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.

இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் கேண்டர்பரியில் நடைபெற்றது. டி20 தொடரில் இங்கிலாந்திடம் தோற்ற இந்திய மகளிர் அணி, ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் ஆட்டத்தை எளிதாக வென்றது. 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய மகளிர் அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் ஆட்டமிழக்காமல் 111 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் எடுத்து அசத்தினார். மந்தனா 40 ரன்களும் ஹர்லீன் தியோல் 58 ரன்களும் எடுத்து உறுதுணையாக இருந்தார்கள். 

இங்கிலாந்து மகளிர் அணி, 44.2 ஓவர்களில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டேனி வியாட் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 88 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது ஒருநாள் ஆட்டத்தை வென்ற இந்திய மகளிர் அணி, இங்கிலாந்தில் 1999-க்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. 1999-க்குப் பிறகு இங்கிலாந்தில் விளையாடிய 6 ஒருநாள் தொடர்களிலும் இந்திய மகளிர் அணி தோற்றது. 

ஒருநாள் தொடரில் 2-0 என இந்திய மகளிர் அணி முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. 3-வது ஒருநாள் ஆட்டம் சனிக்கிழமையன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com