செஸ் இறுதிச்சுற்றில் கார்ல்சனுடன் மோதும் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி

ஜூலியஸ் பேர்  கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு உலக சாம்பியன் கார்ல்சனும் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசியும் தகுதியடைந்துள்ளார்கள். 
அர்ஜுன் எரிகைசி
அர்ஜுன் எரிகைசி

ஜூலியஸ் பேர்  கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு உலக சாம்பியன் கார்ல்சனும் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசியும் தகுதியடைந்துள்ளார்கள். 

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் 2022 பருவத்தின் 5-வது போட்டியாக ஜூலியஸ் பேர்  கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் கார்ல்சன், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்பட 16 வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள். இணையம் வழியாக செப்டம்பர் 25 வரை இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு வீரரும் தலா 15 ஆட்டங்களில் விளையாட வேண்டும். 16 வீரர்களிலிருந்து 8 பேர் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றார்கள். 

காலிறுதியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா தோற்றாலும் மற்றொரு இந்திய வீரரான அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் லியம் லீயை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் 4 ஆட்டங்களின் முடிவில் 2-2 என சமன் ஆனது. பிறகு நடைபெற்ற டை பிரேக்கரில் 2-0 என லியம் லீயை வீழ்த்தினார் அர்ஜுன் எரிகைசி. மற்றொரு அரையிறுதியில்  உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், வின்சென்ட் கீமரை 3-1 என வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இன்றும் நாளையும் என இரு நாள்களுக்கு நடைபெறும் இறுதிச்சுற்றில் கார்ல்சனுடன் மோதவுள்ளார் அர்ஜுன் எரிகைசி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com