திராவிட்டை முந்திய விராட் கோலி! 

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியாவில் அதிகமான ரன்களை எடுத்தவர் பட்டியலில் ராகுல் திராவிட்டை பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பிடித்தார் விராட் கோலி. 
திராவிட்டை முந்திய விராட் கோலி! 
Published on
Updated on
1 min read

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியாவில் அதிகமான ரன்களை எடுத்தவர் பட்டியலில் ராகுல் திராவிட்டை பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பிடித்தார் விராட் கோலி. 

ஆஸி. அணிக்கு எதிராக ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-1 என கைப்பற்றியது இந்தியா.

முதலில் ஆடிய ஆஸி. 186/6 ரன்களையும், இரண்டாவதாக ஆடிய இந்திய அணி 187/4 ரன்களையும் குவித்தன. விராட் கோலி 63, சூரியகுமாா் யாதவ் 69 ரன்களை விளாசினா்.

இந்தப் போட்டியில் 63 ரன்கள் அடித்ததன் மூலம் சரவ்தேச கிரிக்கெட் போட்டிகளில் 24078 ரன்களுக்கு சொந்தமானார். சராசரி 53.62. அதிகபட்ச ரன் 257. 71 சதங்கள், 125 அரை சதங்களும் இதில் அடங்கும். இந்தியாவிலேயே அதிகமாக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பித்துள்ளார். ராகுல் திராவிட் 24028 ரன்களுடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியாவில் அதிகமாக ரன்களை எடுத்தவர்கள் பட்டியல்: 

  1. சச்சின் டெண்டுல்கர் - 34,357 
  2. விராட் கோலி  - 24,028 
  3. ராகுல் திராவிட் -  24,028 
  4. சவுரவ் கங்குலி  - 18,433 
  5. எம்.எஸ். தோனி -  17,092 
  6. விரேந்தர் சேவாக்  - 16,892 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com