தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

அர்ஜுன் எரிகைசியை வென்று சாம்பியன் ஆன கார்ல்சன்

ஜூலியஸ் பேர்  கோப்பை செஸ் போட்டியை உலக சாம்பியன் கார்ல்சன் வென்றுள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:55 pm IST

ஜூலியஸ் பேர்  கோப்பை செஸ் போட்டியை உலக சாம்பியன் கார்ல்சன் வென்றுள்ளார்.

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் 2022 பருவத்தின் 5-வது போட்டியாக ஜூலியஸ் பேர்  கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் கார்ல்சன், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்பட 16 வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள். இணையம் வழியாக செப்டம்பர் 25 வரை இப்போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு வீரரும் தலா 15 ஆட்டங்களில் விளையாடினார்கள். 16 வீரர்களிலிருந்து 8 பேர் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றார்கள். 

காலிறுதியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா தோற்றாலும் மற்றொரு இந்திய வீரரான அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்று இறுதிச்சுற்று வரை முன்னேறினார். இரு நாள்களுக்கு நடைபெற்ற இறுதிச்சுற்றில் கார்ல்சனுடன் மோதினார். 

சனிக்கிழமையன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் 2.5-0.5 என வெற்றி பெற்றார் கார்ல்சன். இதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தை அவர் டிரா செய்தாலே சாம்பியன் ஆவது உறுதி என்கிற நிலையில் முதல் இரு ஆட்டங்களையும் வென்று 2-0 என முன்னிலை பெற்றார் கார்ல்சன். இதையடுத்து இரு ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் ஜூலியஸ் பேர்  கோப்பையை கார்ல்சன் வென்றதாக அறிவிக்கப்பட்டது. மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூரில் 4-வது பட்டத்தை கார்ல்சன் வென்றுள்ளார். ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில் கார்ல்சன் முதலிடத்திலும் பிரக்ஞானந்தா 2-வது இடத்திலும் உள்ளார்கள். 

இறுதிச்சுற்றில் விளையாடிய கார்ல்சனும் அர்ஜுன் எரிகைசியும் நவம்பரில் சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெறும் கடைசிக்கட்டப் போட்டிக்குத் தகுதியடைந்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.