மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஐபிஎல் டிக்கெட்: விடியவிடிய சேப்பாக்கத்தில் காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க விடியவிடிய மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் காத்துள்ளனர்.

News image

படம்: டிவிட்டர்/சென்னை சூப்பர் கிங்ஸ்

Updated On :27 ஏப்ரல் 2023, 3:00 am

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க விடியவிடிய மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் காத்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்ததால் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தன. இந்தாண்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தாண்டு சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை சென்னை அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் மைதானம் நிரம்பி வலிந்தன.

இந்நிலையில், வரும் 30-ஆம் தேதி சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் மைதானத்தில் இன்று நேரடியாக விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த டிக்கெட்டுகளை வாங்க நேற்று இரவு முதல் விடியவிடிய ரசிகர்கள் காத்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடர் என்று தகவல்கள் பரவி வரும் நிலையில், சென்னை அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் காண ரசிகர்கள் படையெடுத்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் நேரடியாக மைதானத்திலும், பேடிஎம் செயலிகள் மூலம் இணையத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ. 1,500-க்கு விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகள் மைதானத்தின் நேரடி கவுண்டர்களில் மட்டுமே கிடைக்கின்றன. ஆன்லைனில் ரூ. 2,500 முதல் ரூ. 5,000 வரையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.