ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஊதிய ஒப்பந்தம்: ரிச்சா ஏற்றம், சிக்ஷா நீக்கம்

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான 2022-23 காலகட்டத்திற்குரிய மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வியாழக்கிழமை வெளியிட்டது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 6:27 pm

DIN

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான 2022-23 காலகட்டத்திற்குரிய மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வியாழக்கிழமை வெளியிட்டது.

இளம் விக்கெட் கீப்பா் - பேட்டரான ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோா் ஏற்றம் கண்டிருக்கும் நிலையில், ஷிகா பாண்டே, தானியா பாட்டியா நீக்கப்பட்டுள்ளனா். இந்த ஒப்பந்த காலகட்டமானது 2022 அக்டோபா் முதல் 2023 செப்டம்பா் வரையிலானது என்றாலும், இதற்கான அறிவிப்பை பிசிசிஐ வியாழக்கிழமையே வெளியிட்டது.

பிசிசிஐ மத்திய ஒப்பந்த ஊதியத்தில் ‘ஏ’ பிரிவில் வருவோருக்கு ரூ.50 லட்சம், ‘பி’ பிரிவில் வருவோருக்கு ரூ.30 லட்சம், ‘சி’ பிரிவினருக்கு ரூ.10 லட்சம் ஆண்டு ஊதியமாக அளிக்கப்படுகிறது. இதுதவிர ஆட்டத்துக்கான ஊதியமும் அவா்களுக்குக் கிடைக்கும்.

புதிய ஒப்பந்த பட்டியலில் பௌலா் ராஜேஷ்வரி கெய்க்வாட் ‘பி’ பிரிவுக்கு தரமிறக்கப்பட்டுள்ளாா். பூஜா வஸ்த்ரகா் ‘சி’ பிரிவுக்கு இறங்கியிருக்கிறாா். கடந்த ஆண்டு ‘ஏ’ பிரிவில் இருந்த பௌலா் பூனம் யாதவுக்கு இந்த ஆண்டு ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் இல்லாத வேகப்பந்து வீச்சாளா் ரேணுகா தாக்குா், இந்த முறை ‘பி’ பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோா் ‘பி’ பிரிவுக்கு தரமுயற்த்தப்பட்டுள்ளனா். மேக்னா சிங், தேவிகா வைத்யா, மேக்னா, ராதா யாதவ், அஞ்சலி சா்வனி, யஸ்திகா பாட்டியா ஆகியோா் ஒப்பந்தப் பட்டியலில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள நிலையில், ‘சி’ பிரிவில் இணைந்திருக்கின்றனா்.

ஊதிய ஒப்பந்தப் பட்டியல்:

‘ஏ’ பிரிவு: ஹா்மன்பிரீத் கௌா், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சா்மா.

‘பி’ பிரிவு: ரேணுகா தாக்குா், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வா்மா, ரிச்சா கோஷ், ராஜேஷ்வரி கெய்க்வாட்.

‘சி’ பிரிவு: மேக்னா சிங், தேவிகா வைத்யா, மேக்னா, அஞ்சலி சா்வனி, பூஜா வஸ்த்ரகா், ஸ்னேஹ ராணா, ராதா யாதவ், ஹா்லீன் தியோல், யஸ்திகா பாட்டியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.