இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு அதிக அளவு ஆதரவு இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
50 ஓவர் உலகக் கோப்பை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கி இந்தியாவில் 10 முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு அதிக அளவு ஆதரவு இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதை நான் அருகிலிருந்து பார்த்ததே இல்லை. இந்திய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற போதும் நான் அணியில் விளையாடவில்லை. ஆனால், அது மிகவும் அழகான தருணம். உலகக் கோப்பை வெல்வதன் பின்னணியில் நிறைய நினைவுகள் இருக்கிறது. இந்தியாவில் நாங்கள் பயணிக்கும் ஒவ்வொரு மைதானத்திலும் எங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும் என்பது எங்களுக்கு நிச்சயமாக தெரியும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு கடைசியாக இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. நாங்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடி இருந்தோம். ஆனால், கடைசியாக 12 ஆண்டுகளுக்கு முன்னதாக 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடியது. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் உள்ளது என்றார்.
மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை பாதிக்கிறதா?

ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

பேரவையில் கட்சித் தலைவர்களின் துதிபாடல்தான் நடக்கிறது! பிரேமலதா

ஸ்லோவாக்கியா நாடாளுமன்றத் தலைவருக்கு இந்தியாவின் பாரம்பரிய உணவைப் பரிசளித்த பிரதமர் மோடி!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



