20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து!

கடந்த 2003 ஆம் ஆண்டுக்குப் பின் இங்கிலாந்து அணி முதல் முறையாக ஜிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து!

கடந்த 2003 ஆம் ஆண்டுக்குப் பின் இங்கிலாந்து அணி முதல் முறையாக ஜிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் போட்டியை இங்கிலாந்தில் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி வருகிற 2025 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி முதல் தொடங்கி மே 31 ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறவுள்ளது. டெஸ்ட் போட்டி நடத்தப்படுவது உறுதியான போதிலும் இங்கிலாந்தில் எங்கு நடைபெறுகிறது என்ற தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

இங்கிலாந்தில் போட்டி நடைபெறுவது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் பேசியதாவது: 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிம்பாப்வே அணியுடன் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சிறப்பான வரலாறு உள்ளது. ஜிம்பாப்வே அணி உலக தரத்திலான வீரர்களை கொடுத்துள்ளது. ஜிம்பாப்வேவுடன் உறவை மேம்படுத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இரு நாட்டு கிரிக்கெட் அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி அதற்கான தொடக்கமாக இருக்கும் என்றார்.

கடைசியாக இங்கிலாந்து அணி கடந்த 2003 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருந்தது. 2003 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

41 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போதும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com