உலகக் கோப்பை செஸ்: கார்ல்சென் சாம்பியன்

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
உலகக் கோப்பை செஸ்: கார்ல்சென் சாம்பியன்

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தா - நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் இடையே நடைபெற்ற எஃப்ஐடிஇ (FIDE) உலகக் கோப்பை செஸ் 2023 சாம்பியன் பட்டத்தை உலகின் முதல்நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சென் வென்றுள்ளார். 

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி வரை நுழைந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். கிளாசிக் சுற்றுகள் சமனில் முடிந்த நிலையில் டை பிரேக்கர் முறையில் போட்டிகள் நடைபெற்றது.

அஜா்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா - நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் ஆகியோா் மோதும் இறுதிச்சுற்றின் இரண்டு ஆட்டங்களும் ‘டிரா’ ஆனது. இதையடுத்து வெற்றியாளரை தீா்மானிப்பதற்கான 2 டை-பிரேக்கா் ஆட்டங்கள் இன்று தொடங்கின. முதல் டை பிரேக்கர் ஆட்டம் தொடங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இரு வீரர்களும் வெற்றி வாய்ப்பை தங்கள் பக்கம் இருத்திக் கொள்ள கடுமையாக போராடினர். பிரக்ஞானந்தா கடைசி வரை போராடி வெற்றி வாய்ப்பை இழந்தார். இதன் மூலம், உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் டை பிரேக்கரில் கார்ல்சென் முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து, இரண்டாவது டை பிரேக்கர் சுற்றுப் போட்டியிலும் மேக்னஸ் கார்ல்சென் ஆரம்பம் முதலே முன்னிலைப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

உலகளவில் 2, 3 ஆம் நிலை வீரர்களை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா, முதல் நிலை வீரரான கார்ல்சனிடம் தோல்வியடைந்தார்.

செஸ் உலகக்கோப்பையை வென்ற கார்ல்சனுக்கு ரூ.91 லட்சம், 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு ரூ. 67 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேப்பிட் ஃபாா்மட்டிலான டை-பிரேக்கா் ஆட்டத்தில் இரு போட்டியாளா்களுக்கும் தலா 25 நிமிஷங்கள் ஒதுக்கப்படும். அதுபோக, ஒவ்வொரு நகா்த்தலுக்கும் கூடுதலாக 10 விநாடிகள் கிடைக்கும். அவ்வாறு 2 டை பிரேக்கா் ஆட்டங்களும் டிரா ஆகும் பட்சத்தில், அடுத்து இரு ஆட்டங்கள் விளையாடப்படும். அதில் 2 போட்டியாளா்களுக்கும் தலா 5 நிமிஷங்கள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு நகா்த்தலுக்கும் 3 விநாடிகள் கூடுதலாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com