இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா இலங்கை அணியின் காயமடைந்தவர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடர் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 30) முதல் தொடங்குகிறது. ஆசியக் கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட உள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தானில் போட்டிகள் நடைபெறுவதால் மற்ற அணிகளைக் காட்டிலும் அந்த இரு அணிகளுக்கு கோப்பையை வெல்ல சாதகமான சூழல் உள்ளது.
இந்த நிலையில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா இலங்கை அணியின் காயமடைந்தவர்கள் பட்டியலில் இணைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இலங்கை அணியில் ஏற்கனவே காயம் காரணமாக லகிரு குமாரா, துஷ்மந்தா சமீரா மற்றும் வனிந்து ஹசரங்கா போன்ற வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் தில்ஷன் மதுஷங்காவும் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அவர் ஆசியக் கோப்பையிலிருந்து விலகியுள்ளார். உலகக் கோப்பை தொடரில் இடம்பெறுவாரா என்பது குறித்து உறுதியாக கூற முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.