
முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் மதன் லால் 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்துள்ளார். 2000-2001 ஆம் ஆண்டு தேர்வுக் குழு உறுப்பினருமாகவும் இருந்துள்ளார்.
ஆசிய கோப்பை போட்டிகள் நாளை துவங்குகிறது. இதில் இந்திய அணி தேர்வின்போது ரோஹித் சர்மா, “இந்திய வீரர்கள் யார் எந்த இடத்தில் வேண்டுமானால் விளையாட முன்வர வேண்டும். இதை அனைவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் எனது இடம், இதுதான் பேட்டிங் செய்ய எனக்கு சிறந்த இடமென யாரும் சொல்லக்கூடாது” எனக் கூறியிருந்தார். இதற்கு மதன் லால், “இது வினோதமான கேப்டன்சியாக (தலைமைப் பண்பு) இருக்கிறது” எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
யாரை எங்கு வேண்டுமானால் பேட்டிங் செய்ய சொல்வதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அந்ததந்த இடத்திற்கான பேட்டர்கள் அவர்களது இடத்திலேயே விளையாட வேண்டும். இந்திய அணி ஆசிய கோப்பை, உலகக் கோப்பை வெல்ல வேண்டுமெனில் 4வது, 8வது இடங்களில் விளையாடுபவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.
இதையும் படிக்க: ஆசியக் கோப்பை: முதல் இரு போட்டிகளிலிருந்து விலகிய கே.எல்.ராகுல்!
பேட்டிங் ஆர்டரை மாற்றிக் கொண்டே இருந்தால் யாருக்குமே நம்பிக்கை இருக்காது. ஒரு சில போட்டிகளில் போட்டியின் தன்மைக்கேற்ப ஆர்டரை மாற்றலாமே தவிர ஒவொரு வீரருக்கும் அவர்களது பேட்டிங் ஆர்டர் தெரிந்திருக்க வேண்டும். இது டி20 போட்டிகள் இல்லை.
இதையும் படிக்க: ரெட் கார்டு வாங்கிய முதல் கிரிக்கெட் வீரர்!
தொடக்க வீரர்கள் சரியாக விளையாடினால் அதற்கேற்றார்போல மிடில் ஆர்டர் பேட்டர்கள் விளையாட வேண்டும். துவக்கம் சரியில்லையெனில் அதையும் சரிசெய்து அதற்கேற்றார்போல விளையாட வேண்டும். எனவே மிடில் ஆர்டர் என்பது சிறப்பான இடமாகும். யார் எங்கு வேண்டுமானால் விளையாடலாம் என்பது விசித்தரமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.
செப்.3ஆம் நாள் உலகக் கோப்பை அணி அறிவிக்க உள்ள நிலையில் பலரும் பலவிதமான கருத்துகளை கூறிவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.