தனிப்பட்ட முறையில் ஒருவரை பிடிக்காததால் அணியில் எடுக்கமாட்டேன்...: வீரர்கள் தேர்வு குறித்து ரோஹித் விளக்கம்!

உலகக் கோப்பை அணியில் வீரர்களை தேர்வு செய்யாமல் இருப்பதற்கான காரணங்களை தெளிவாக அவர்களிடமே கூறிவிடுவோமென ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 
படம்: ட்விட்டர் | ரோஹித் சர்மா
படம்: ட்விட்டர் | ரோஹித் சர்மா
Published on
Updated on
1 min read

ஆசிய கோப்பை நாளை (ஆக.30) துவங்க உள்ளது. பாகிஸ்தானிலும் இலங்கையிலும் ஆசியக் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற உள்ளன. ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அக்.5ஆம் நாள் இந்திய மண்ணில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஒருநாள் உலகக் கோப்பை அணியில் யார்யார் எல்லாம் இடம்பெறுவார்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஆசியக் கோப்பை அணி தேர்விலுமே பலரும் அதிருப்தியை தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் ரோஹித் சர்மா கூறியதாவது: அணியாக சிறப்பாக இருக்க வேண்டுமெனில் சிலர் தேர்வாகாமல் போவது நடக்கும். அப்படி தேர்வாகாமல் போனவர்களிடம் நானும் திராவிட்டும் இதனால்தான் நீங்கள் அணியில் இடம்பெறவில்லை என விளக்கம் அளிப்போம். ஒவ்வொரு பிளேயிங் லெவன் தேர்வின்போதும் இதைத்தான் செய்கிறோம். தனித்தனியாக ஒவ்வொரு வீரர்களிடமும் நீங்கள் ஏன் தேர்வாகவில்லை என்பதை விளக்குவோம். 

படம்: ட்விட்டர்| பயிற்சியில் ரோஹித் சர்மா
படம்: ட்விட்டர்| பயிற்சியில் ரோஹித் சர்மா

எனக்கு பிடிக்காததால் ஒருவரை அணியில் எடுக்கமாட்டேன் அப்படியெல்லாம் இல்லை. கேப்டன்சி (தலைமைப் பண்பு) என்பது ஒருவருக்கு பிடிக்கும் பிடிக்காது என்பதை பொறுத்து அமைவதில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் இருக்கும். அதேபோல ஒருவர் அணியில் இடம்பெறாமல் போவது அதிர்ஷடத்தை பொறுத்தது. எல்லா முடிவுகளும் கலந்தாலோசித்தே எடுக்கப்படுகிறது.

2011 உலகக் கோப்பை அணியில் நான் தேர்வாகவில்லை. அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அப்போது யுவராஜ் சிங் என்னை அவரது அறைக்கு அழைத்து இரவு உணவு உண்ண வெளியே கூட்டிச் சென்றார். அணியில் இல்லாதது குறித்து அவர் விளக்கமளித்தார். அதனால் எனக்கு அணி தேர்வு குறித்து அனுபவம் இருக்கிறது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com