உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் ஆசியக் கோப்பை தொடர் முழுவதுமாக விலகியுள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் (ஆகஸ்ட் 30) தொடங்கியது. ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் விளையாடி வருகின்றன. நாளை நடைபெறும் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் ஆசியக் கோப்பை தொடரிலிந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவித்திருப்பதாவது: வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரான லிட்டன் தாஸ் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஆசியக் கோப்பை தொடருக்காக இலங்கை செல்லும் வங்கதேச அணியுடன் செல்லவில்லை. அவர் காய்ச்சலில் இருந்து குணமடையாததால் ஆசியக் கோப்பை தொடர் முழுவதுமாக விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிட்டன் தாஸுக்கு பதிலாக வங்கதேச அணியில் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அனமுல் ஹாக் பிஜோய் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் இசையமைப்பாளரான அனிருத்!

பி. எஸ். வீரப்பா - நான் சந்தித்த பிரபலங்கள் - 48
நாட்டையும் அரசியலமைப்பையும் அவமதித்த திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி

ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார் நிதீஷ் மகன் நிஷாந்த்!
வீடியோக்கள்
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

