டெஸ்ட் போட்டிக்கான அணியில் மீண்டும் இடம்பெறுவேன்: பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்

டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் நம்பிக்கை இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிக்கான அணியில் மீண்டும் இடம்பெறுவேன்: பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்

டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் நம்பிக்கை இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். நடப்பு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் இரட்டைச் சதம் விளாசி அசத்தினார். அதேபோல, இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின் 3-வது டி20 போட்டியில் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். மேக்ஸ்வெல் தற்போது தாயகம் திரும்பியுள்ளார். 

இந்த நிலையில, டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் நம்பிக்கை இருப்பதாக  கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் எண்ணத்தைக் கைவிடவில்லை. நான் ஆஸ்திரேலிய அணிக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில்  (ஒருநாள் மற்றும் டி20) போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறேன். டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய மேக்ஸ்வெல் இதுவரை வெறும் 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு மேக்ஸ்வெல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது  குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com