டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா; வெற்றி குறித்து ருதுராஜ் கெய்க்வாட் கூறியது என்ன?

உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கிடைத்துள்ள டி20 தொடர் வெற்றி ரசிகர்களுக்கு சிறிது மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாக இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா; வெற்றி குறித்து  ருதுராஜ் கெய்க்வாட் கூறியது என்ன?

உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கிடைத்துள்ள டி20 தொடர் வெற்றி ரசிகர்களுக்கு சிறிது மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாக இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது. இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி பெரும் ஏமாற்றமாக அமைந்தது. உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்த சில நாள்களிலேயே இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியது. இந்தத் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. 

இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கிடைத்துள்ள டி20 தொடர் வெற்றி ரசிகர்களுக்கு சிறிது மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாக ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றையப் போட்டிக்குப் பிறகு அவர் பேசியதாவது: உலகக் கோப்பையில்  ஏற்பட்ட தோல்வி அனைவருக்கும் ஏமாற்றமளித்த நிலையில், இந்த டி20 தொடர் வெற்றி அனைவருக்கும் சிறிது மகிழ்ச்சியை கொடுக்கும் என நினைக்கிறேன். ஆட்டத்தை ரசித்து விளையாட வேண்டியது முக்கியம் என நினைக்கிறேன். அனைவரும்  ஒவ்வொரு படிநிலையில் பொறுப்புகளை ஏற்று விளையாடுகின்றனர். டி20 தொடரில் வெற்றி பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆனால், இந்த டி20 தொடரில் மீதம் ஒரு போட்டி இருக்கிறது. அச்சமின்றி விளையாட வேண்டும் என்பது குறித்து ஆலோசித்தோம். உலகக் கோப்பை அணியில் இருந்த 2-3 வீரர்கள் அணியில் இருந்தது அணிக்கு பலம் சேர்த்தது.

அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்கள் என்பதால் அணியில் நேர்மறையான ஆற்றல் இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். ஆட்டத்தின் போக்கை கணிப்பதிலும், ஆட்டத்தைப் புரிந்துகொள்வதிலும் மகேந்திர சிங் தோனி கவனம் செலுத்தி அணியை சிறப்பாக வழிநடத்துவார். நமது எண்ணங்களை சிதறவிடக் கூடாது என அவர் கூறுவார். தொடக்க ஆட்டக்காரராக சிறப்பான பங்களிப்பை வழங்க உனக்கு போதுமான நேரமிருக்கிறது எனவும் கூறுவார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com