சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது: ஜோஸ் பட்லர்

மோசமான ஃபார்மிலிருந்து மீண்டும் சிறப்பாக விளையாடுவதற்கான நேரம் வந்துவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது: ஜோஸ் பட்லர்

மோசமான ஃபார்மிலிருந்து மீண்டும் சிறப்பாக விளையாடுவதற்கான நேரம் வந்துவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் ஒருநாள் போட்டிகளில் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரும் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. தற்போது இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்ற நிலையில், நேற்று (டிசம்பர் 7) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். 

இந்த நிலையில், மோசமான ஃபார்மிலிருந்து மீண்டும் சிறப்பாக விளையாடுவதற்கான நேரம் வந்துவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் மீண்டும் சிறப்பான ஃபார்முக்குத் திரும்பும் தருணத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். சில நேரங்களில்  எனக்கான தருணம் அமைந்தபோதிலும், அதை என்னால் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருந்தது எனக்கு ஏமாற்றமளித்தது. எனது மோசமான ஃபார்மின் காரணமாக நான் நொந்து போயிருந்தேன். அதிலிருந்து மீண்டு சிறப்பாக விளையாடுவதற்கான நேரம் வந்துவிட்டது. நேற்று நான் சிறப்பாக விளையாடியது எனக்கு மகிழ்ச்சியளித்தது. நீண்ட நாள்கள் கழித்து எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளேன் என்றார். 

ஜோஸ் பட்லரின் நேற்றைய அரைசதம் செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு அவர் அடித்துள்ள முதல் அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com