இவர்கள் இருவரும் எனது ஹீரோக்கள்; மிட்செல் ஜான்சனின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த கவாஜா!

டேவிட் வார்னர் குறித்து மிட்செல் ஜான்சன்  விமர்சித்ததைத் தொடர்ந்து, வார்னருக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா பேசியுள்ளார்.
இவர்கள் இருவரும் எனது ஹீரோக்கள்; மிட்செல் ஜான்சனின் விமர்சனத்துக்கு  பதிலடி கொடுத்த கவாஜா!
Published on
Updated on
1 min read

டேவிட் வார்னர் குறித்து மிட்செல் ஜான்சன்  விமர்சித்ததைத் தொடர்ந்து, வார்னருக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா பேசியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் சேர்க்கப்பட்டது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் விமர்சித்துள்ளார். டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளில் ஃபார்மிலும் இல்லை, அணியில் இடம் பெறுவது போன்று அவர் நடந்து கொள்ளவும் இல்லை என மிட்செல் ஜான்சன் விமர்சித்துள்ளார். அதேபோல கடந்த 2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் விமர்சித்தார். இதனையடுத்து, வார்னருக்கு ஆதரவாக பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டேவிட் வார்னர் குறித்து மிட்செல் ஜான்சன்  விமர்சித்ததைத் தொடர்ந்து, வார்னருக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் எனது மனதில் ஹீரோக்களாக உள்ளனர். அவர்கள் ஓராண்டு கிரிக்கெட் விளையாடாமல் இருந்து கடினமான காலத்தை கடந்து வந்துவிட்டனர். யாரும் இங்கு மிகச் சரியானவர்கள் இல்லை. மிட்செல் ஜான்சன் மிகச் சரியானவர் கிடையாது.

வார்னர் மற்றும் ஸ்மித்  செய்தது போட்டிக்காக செய்தது. அவர்கள் ஓராண்டு கிரிக்கெட் விளையாடாமல் இருந்துவிட்டனர். ஓராண்டு கிரிக்கெட் விளையாடாமல் இருப்பது மிக நீண்ட காலம். அவர்கள் பந்தை சேதப்படுத்தியதைக் குறித்து அதிகம் விவாதம் செய்யலாமா வேண்டாமா என உறுதியாக கூறமுடியவில்லை. ஆனால், மிட்செல் ஜான்சனின் விமர்சனம் மிகவும் கடுமையாக  உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com