பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

2-வது டெஸ்ட்: வங்கதேசம் 30 ரன்கள் முன்னிலை!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வங்கதேசம் 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்தைக் காட்டிலும் 30 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

News image
Updated On :8 டிசம்பர் 2023, 1:22 pm

DIN

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வங்கதேசம் 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்தைக் காட்டிலும் 30 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் (டிசம்பர் 6) இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியின் முதல் நாளில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முஸ்தபிசூர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார்.

கிளன் பிளிப்ஸ் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இதனையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 55 ரன்களுக்கு 5  விக்கெட்டை  இழந்திருந்தது. வங்கதேசம் தரப்பில் மெஹிதி ஹாசன் 3 விக்கெட்டுகளையும், தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். 

இந்த நிலையில், நேற்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

வங்கதேசம் நியூசிலாந்தைக் காட்டிலும் 117 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நியூசிலாந்து வீரர் கிளன் பிளிப்ஸ் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். அவர் 72 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், நியூசிலாந்து வங்கதேசத்தைக் காட்டிலும் 8 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம் 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடியது. போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டத்தைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், போதிய வெளிச்சமின்மை பிரச்னையால் நடுவர்கள் மூன்றாம் நாள் ஆட்டத்தை இத்துடன்  நிறுத்துவதாக அறிவித்தனர். அதன்படி, 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் நியூசிலாந்தைக் காட்டிலும் 30 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

Story image

ஜாகிர் ஹாசன் 16 ரன்களுடனும், மோமினுல் ஹாக் 0 ரன்களுடனும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.