தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹார் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனவும், மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதும் சந்தேகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று (டிசம்பர் 10) முதல் தொடங்குகிறது. இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹார் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனவும், மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதும் சந்தேகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: கடைசி டி20: தொடரை வெல்லும் முனைப்பில் ஜிம்பாப்வே, அயர்லாந்து!
இது தொடர்பாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: தீபக் சஹாரின் நெருங்கிய உறவினர் மருத்துவமனையில் அனுமதிப்பட வேண்டிய சூழல் இருப்பதால், அவர் டர்பனில் இந்திய அணியுடன் இன்னும் இணையவில்லை. அதன் காரணமாக அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றையப் போட்டியில் அவர் விளையாடவில்லை. அவருடைய உறவினரின் உடல்நிலையைப் பொறுத்தே அவர் இந்திய அணியுடன் இணைவாரா மாட்டாரா என்பது தெரியும் என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் கடைசிப் போட்டியிலும் தீபக் சஹார் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பப்பாளி பழமே - ஹிப்ஹாப் ஆதி, சைத்ரா குத்தாட்டத்தில் புதிய பாடல்!

நாளை என்பது வரும், சூரியன் உதிக்கும்..! தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா நம்பிக்கை!

போர்நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி 4% உயர்வு!
இபிஎஸ்ஸுடன் இருப்பதைவிட இறப்பதே மேல்; ஆனால், இப்போது அதே கூட்டணியில்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

