முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது..?

தேசிய அளவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு, கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முகமது ஷமி/படம்:பிசிசிஐ
முகமது ஷமி/படம்:பிசிசிஐ
Published on
Updated on
1 min read

தில்லி : தேசிய அளவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருதுக்கு, கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில், இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் 33 வயதான முகமது ஷமி. உலகக்கோப்பைத் தொடரில் மொத்தம் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதன்முலம், உலகக்கோப்பைத் தொடரில் அதிகபட்ச விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற முன்னாள் வீரர் ஜகீர் கானின் சாதனையையும் முகமது ஷமி முறியடித்துள்ளார்.மேலும், இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடர்களில், 4 முறை 5 விக்கெட்டுகள் மற்றும் அதற்கும் அதிகமாக கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் ஷமி தன்வசப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கான வீரர்கள் பரிந்துரை பட்டியலில், முகமது ஷமியின் பெயரையும் சேர்க்க, விளையாட்டுத் துறை அமைச்சகத்திடம் பிசிசிஐ சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியல்:
முகமது ஷமி(கிரிக்கெட்)
அஜய் ரெட்டி(பார்வையற்றோருக்கான கிரிக்கெட்)
ஓஜஸ் பிரவின் தியோடலே மற்றும் அதிதி கோபிசந்த் சுவாமி(வில்வித்தை)
ஷீதல் தேவி(பாரா வில்வித்தை)
பருல் சவுத்ரி மற்றும் எம் ஸ்ரீசங்கர்(தடகளம்)
முகமது ஹுசாமுதீன்(குத்துச்சண்டை)
ஆர் வைஷாலி(செஸ்)
திவ்யகிருதி சிங் மற்றும் அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்)
திக்ஷா தாகர்(கோல்ப்) 
கிரிஷன் பகதூர் பதக் மற்றும் சுசீலா சானு(ஆண்கள் ஹாக்கி)
பிங்கி (புல்வெளி பந்து)
ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்(துப்பாக்கிச் சுடுதல்)
ஆன்டிம் பங்கல்(மல்யுத்தம்) 
அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்)


மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியல்: சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி (பேட்மிண்டன்).

தியான் சந்த் வாழ்நாள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியல்: கவிதா (கபடி), மஞ்சுஷா கன்வார் (பேட்மிண்டன்) வினீத் குமார் சர்மா (ஹாக்கி).

துரோணாச்சார்யா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியல்: கணேஷ் பிரபாகரன் (மல்லகாம்ப்), மகாவீர் சைனி (பாரா தடகளம்), லலித் குமார் (மல்யுத்தம்), ஆர்.பி.ரமேஷ் (செஸ்), சிவேந்திர சிங் (ஹாக்கி).
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com