ஐபிஎல் ஏலத்தில் நாங்கள் கையாண்ட யுக்தி இதுதான்: டு பிளிசிஸ்

பெங்களூரு மைதானத்தில் சிறப்பாக செயல்படும் விதத்தில் அணிக்கு வீரர்களை ஏலமெடுப்பதே தங்களது யுக்தியாக இருந்ததாக பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார். 
படம் | எக்ஸ் (ட்விட்டர்)
படம் | எக்ஸ் (ட்விட்டர்)


பெங்களூரு மைதானத்தில் சிறப்பாக செயல்படும் விதத்தில் அணிக்கு வீரர்களை ஏலமெடுப்பதே தங்களது யுக்தியாக இருந்ததாக பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார். 

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அண்மையில் துபையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். இந்த நிலையில், பெங்களூரு மைதானத்தில் சிறப்பாக செயல்படும் விதத்தில் அணிக்கு வீரர்களை ஏலமெடுப்பதே தங்களது யுக்தியாக இருந்ததாக பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த ஐபிஎல் சீசனுக்குப் பிறகு, பெங்களூரு மைதானத்தில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியுள்ளதை உணர்ந்தோம். பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தைத் தவிர மற்ற மைதானங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.  எங்களது சொந்த மைதனாமான சின்னசுவாமி மைதானத்தில் எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பது குறித்து சிந்தித்தோம்.

ஐபிஎல் ஏலம் எங்கள் கண்களுக்கு சரியான தீர்வாகத் தெரிந்தது. அதனால், பெங்களூரு மைதானத்தின் தன்மைக்கு ஏற்றவாறு விளையாடும் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களை ஏலத்தில் எடுத்தோம். எங்களது தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவரும் இந்த முடிவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பெங்களூரு அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் மிகவும் வலுவாக இருக்கிறோம் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com