முதல் டெஸ்ட்: உணவு இடைவேளைக்கு முன்பு 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்னதாக 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 91 ரன்கள் குவித்துள்ளது.
முதல் டெஸ்ட்: உணவு இடைவேளைக்கு முன்பு 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்னதாக 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 91 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்களுக்கும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஷுப்மன் கில் வந்த வேகத்தில் 2 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில், விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடி வருகின்றது.

உணவு இடைவேளையின்போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 33 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com