சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: டேவிட் வார்னர் சாதனை!

பிரபல ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: டேவிட் வார்னர் சாதனை!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல்நாள் முடிவில் 187/3 ரன்கள் எடுத்துள்ளது. இதில் டேவிட் வார்னர் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

161 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் 6932 ரன்கள் எடுத்துள்ளார். சமீபத்தில் தனது 20வது ஒருநாள் சதத்தினை நிறைவு செய்ததனால் தொடக்க வீரராக மொத்தம் 46 சதங்கள் அடித்துள்ளார். இந்த சதத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். தொடக்க வீரராக சச்சின் 45 சதங்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வார்னர் 8689 ரன்கள் அடித்துள்ளார். 1024 பவுண்டரிகள் 69 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 

டெஸ்ட், ஒருநாள், டி20 முறையே டேவிட் வார்னர் 18,518 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிகபட்ச ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸி.க்காக அதிக ரன்கள் அடித்தவர்கள்: 

ரிக்கி பாண்டிங் - 27, 368 ரன்கள் (667 இன்னிங்ஸ்) 

டேவிட் வார்னர்- 18,518 ரன்கள் (460 இன்னிங்ஸ்) 

ஸ்டீவ் வாக் - 18, 496 ரன்கள் (548 இன்னிங்ஸ்) 

ஆலன் பார்டர் -  17, 698 ரன்கள் ( 517 இன்னிங்ஸ்) 

மைக்கேல் கிளார்க் - 17, 112 ( 449 இன்னிங்ஸ்) 

மார்க் வாக் - 16, 529 (445 இன்னிங்ஸ்) 

ஸ்டீவ் ஸ்மித்- 15, 857 ரன்கள் (376 இன்னிங்ஸ்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com