தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமாவுக்கு காயம்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு  காயம் ஏற்பட்டது.
தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமாவுக்கு காயம்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு  காயம் ஏற்பட்டது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் 20-வது ஓவரின்போது விராட் கோலி எக்ஸ்டிரா கவர் திசையில் அடித்த பந்தை தடுக்க முயன்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, தென்னாப்பிரிக்க அணியின் மருத்துவர் உதவியுடன் அவர் பெவிலியன் திரும்பினார். 

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு ஸ்கேன் செய்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது உறுதியானது. அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெம்பா பவுமா இல்லாதபோது தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் அணியை வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com