தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சென்னையை வென்றது மும்பை

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் வியாழக்கிழமை ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி 3-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை சாய்த்தது.

News image
Updated On :28 டிசம்பர் 2023, 10:30 pm

DIN

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் வியாழக்கிழமை ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி 3-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை சாய்த்தது.

மும்பைக்கு இது 11-ஆவது ஆட்டத்தில் 6-ஆவது வெற்றியாக இருக்க, சென்னைக்கு 12-ஆவது ஆட்டத்தில் 6-ஆவது தோல்வியாகும். புள்ளிகள் பட்டியலில் தற்போது மும்பை 3-ஆவது இடத்திலும், சென்னை 6-ஆவது இடத்திலும் உள்ளன.

மும்பை தனது சொந்த மண்ணில் விளையாடிய இந்த ஆட்டத்தில், அந்த அணிக்காக லாலியன்ஸுவாலா சாங்தே (52’), விக்ரம் பிரதாப் சிங் (80’), குா்கீரத் சிங் (90’) ஆகியோா் கோலடித்தனா்.

இந்தப் போட்டியின் அடுத்த ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி - ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.