கேப்டனாக சர்வதேசப் போட்டிகளிலிருந்து விடைபெறும் டீன் எல்கர்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக டீன் எல்கர் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டனாக சர்வதேசப் போட்டிகளிலிருந்து விடைபெறும் டீன் எல்கர்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக டீன் எல்கர் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியின்போது தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு காயம் ஏற்பட்டது. அவர் இல்லாதபோது டீன் எல்கர் அணியை வழிநடத்தினார். 

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியதால் அணியை டீன் எல்கர் கேப்டனாக வழிநடத்துவார் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் காயம் காரணமாக ஆடுகளத்தை விட்டு வெளியேறிய பிறகு, அணியை சிறப்பாக வழிநடத்தி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக அமைந்தார் டீன் எல்கர். முதல் டெஸ்டில் சிறப்பாக விளையாடி 185 ரன்கள் எடுத்த டீன் எல்கருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஜனவரி 3-ல் தொடங்கும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணியை டீன் எல்கர் வழிநடத்தவுள்ளார். காயம் காரணமாக விலகிய டெம்பா பவுமாவுக்குப் பதிலாக ஜுஃபையர் ஹம்சா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே டீன் எல்கர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com