டேவிட் வார்னர் அணித் தேர்வுக்குழு உறுப்பினர் கிடையாது: ஆஸ்திரேலிய பயிற்சியாளர்

டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழு உறுப்பினர் இல்லை என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
டேவிட் வார்னர் அணித் தேர்வுக்குழு உறுப்பினர் கிடையாது: ஆஸ்திரேலிய பயிற்சியாளர்

டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழு உறுப்பினர் இல்லை என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் தனது கடைசி டெஸ்ட் தொடர் எனவும், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் வார்னர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கிடையில், டெஸ்ட் போட்டிகளில் வார்னர் களமிறங்கி வந்த தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் மார்கஸ் ஹாரிஸ் விளையாடுவார் என வார்னர் தெரிவித்தார்.

இந்த நிலையில், டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழு உறுப்பினர் இல்லை என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழு உறுப்பினர் இல்லை. டேவிட் வார்னர் தனது தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு மாட் ரென்ஸாவை முன்பு முன்மொழிந்ததாக ஞாபகம். டெஸ்ட் போட்டிகளில் வார்னருக்கு அடுத்து கேம் பான்கிராஃப்ட் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படலாம். தொடக்க ஆட்டக்காரராக கேமரூன் கிரீன் களமிறக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. அவர் அந்த இடத்துக்கு பொருத்தமான வீரர். வீரர் ஒருவர் தனக்குப் பிறகு அந்த இடத்தில் யார் விளையாட வேண்டும் என்பதைக் கூறுவது சிறப்பானது. ஆனால், அப்படி செய்யும்போது  மற்ற வீரர்களை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் ஒதுக்குவது போலிருக்கும். வார்னரிடம் அவரது விருப்பம் என்னவென்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவரது விருப்பத்தைத் தெரிவித்ததில் மகிழ்ச்சி என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com