புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இந்த இரு வீரர்களும் அடுத்த சூப்பர் ஸ்டார்கள்: அனில் கும்ப்ளே

இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு முன்னேறியுள்ளார். அவருடைய வளர்ச்சியைப் பார்த்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.

News image
Updated On :1 பிப்ரவரி 2023, 12:27 pm

DIN

இந்திய இளம் வீரர்களான இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரையும் பாராட்டிப் பேசியுள்ளார் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே.

கடந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார் அர்ஷ்தீப் சிங். 25 ஆட்டங்களில் 39 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இஷான் கிஷன், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இரட்டைச் சதமெடுத்தார். இவர்களைப் பற்றி ஜியோ சினிமா ஓடிடிடி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே பேசியதாவது:

அர்ஷ்தீப் சிங்குடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு முன்னேறியுள்ளார். அவருடைய வளர்ச்சியைப் பார்த்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்தத் தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங்கை அடுத்த சூப்பர் ஸ்டாராகக் கருதுகிறேன். பேட்டர்களில் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நன்குப் பயன்படுத்தி வருகிறார் இஷான் கிஷன். இரட்டைச் சதமெடுத்துள்ளார். அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என நம்பிக்கையாக உள்ளேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.