செல்ஃபிக்கு நோ சொன்ன பிரபல இந்திய கிரிக்கெட் வீரர், காரை சேதப்படுத்திய மர்ம நபர்!

செல்ஃபி எடுக்க அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த ரசிகர் ஒருவர் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரரின் காரினை சேதப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்ஃபிக்கு நோ சொன்ன பிரபல இந்திய கிரிக்கெட் வீரர், காரை சேதப்படுத்திய மர்ம நபர்!

செல்ஃபி எடுக்க அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த ரசிகர் ஒருவர் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரரின் காரினை சேதப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மும்பையில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றின் முன்பு நடைபெற்றுள்ளது. இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா. பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பரும் உணவகம் ஒன்றுக்கு சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உணவகத்தின் முன்பு பிரித்வி ஷாவைக் கண்ட ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். பிரித்வி ஷாவும் செல்ஃபி எடுப்பதற்கு அனுமதி அளித்துள்ளார். இருப்பினும், அவர் இன்னும் அதிகம் செல்ஃபி எடுக்க முயன்றபோது அதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர் பிரித்வி ஷாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த உணவகத்தின் மேலாளர் அங்கு வந்து அந்த அடையாளம் தெரியாதை அப்புறப்படுத்தினார். 

இந்த நிகழ்வுக்குப் பிறகு பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர் உணவகத்தில் இரவு உணவுக்கு சென்றனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது அந்த அடையாளம் தெரியாத நபர் பேஸ்பால் மட்டையை கையில் வைத்துக் காத்திருந்தார். பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர் இருவரும் காரில் அமர்ந்த பிறகு அந்த நபர் காரின் கண்ணாடியினைத் தாக்க தொடங்கியுள்ளார். இதனால், பிரித்வி ஷா வேறு ஒரு காருக்கும், அவரது நண்பர் அவரது மற்றொரு வாகனத்திலும் மாறிச் சென்றனர். இருப்பினும், அந்த அடையாளம் தெரியாத நபருடன் வந்த சிலர் பிரித்வி ஷா சென்ற காரை பின் தொடர்ந்து மீண்டும் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதலில் பெண் ஒருவரும் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, பிரித்வி ஷா இந்த மர்ம நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பிரித்வி ஷாவின் கார் மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com