சிஎஸ்கே கேட்ட கேள்வி: குவியும் பதில்கள்!

சிஎஸ்கே அணியின் சிறந்த 11 வீரர்களைக் குறிப்பிடும்படி ரசிகர்களிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.
சிஎஸ்கே கேட்ட கேள்வி: குவியும் பதில்கள்!

சிஎஸ்கே அணியின் சிறந்த 11 வீரர்களைக் குறிப்பிடும்படி ரசிகர்களிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.

ஐபிஎல் 2022 போட்டியை பாண்டியா தலைமையிலான குஜராத் அணி வென்றது. ஐபிஎல் 2023 போட்டிக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. 

மார்ச் 31 அன்று தொடங்கும் ஐபிஎல் 2023 போட்டி மே 28 அன்று நிறைவுபெறுகிறது. ஆமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இறுதி ஆட்டமும் ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை, ஆமதாபாத், மொஹலி, லக்னெள, ஹைதராபாத், பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவாஹாட்டி, தரம்சாலா ஆகிய நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

குரூப் ஏ பிரிவில் மும்பை, கேகேஆர், ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி பிரிவில் சென்னை, சன்ரைசர்ஸ், பஞ்சாப், ஆர்சிபி, குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. 

ஏப்ரல் 3 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லக்னெள அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. 

இதனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடவுள்ளது. சென்னையில் கடைசியாக விளையாடி ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவேன் என தோனியும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். சிஎஸ்கே அணியின் ஆட்டங்கள் சென்னையில் ஏப்ரல் 3, ஏப்ரல் 12, ஏப்ரல் 21, ஏப்ரல் 30, மே 6, மே 10, மே 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. 

இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களிடம் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம். உங்களுக்குப் பிடித்த 11 சிஎஸ்கே வீரர்களைக் குறிப்பிடுங்கள் என்கிற கேள்விக்குப் பலரும் பதில் அளித்துள்ளார்கள். ரசிகர்கள் தேர்வு செய்யும் சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்கள், 1 விக்கெட் கீப்பர், அதிகபட்சமாக 5 பேட்டர்கள், அதிகபட்சமாக 5 பந்துவீச்சாளர்கள், அதிகபட்சமாக 5 ஆல்ரவுண்டர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரசிகர்கள் பலரும் தேர்வு செய்த சிஎஸ்கே வீரர்களில் தோனி, மைக் ஹஸ்ஸி, ருதுராஜ் கெயிக்வாட், சுரேஷ் ரெய்னா, டு பிளெஸ்சிஸ், ஜடேஜா, பிராவோ, அல்பி மார்கல், தீபக் சஹார், அஸ்வின், ஷர்துல் தாக்குர், முரளி விஜய், வாட்சன், பொலிஞ்சர், ராயுடு போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com