
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் நாளில் இங்கிலாந்து அணி, 65 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் டெஸ்டை இங்கிலாந்து அணி வென்ற நிலையில் 2-வது டெஸ்ட், வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
எதிர்பாராதவிதமாக முதல் 3 விக்கெட்டுகளை 21 ரன்களுக்கு இழந்தது இங்கிலாந்து. ஆனால் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட்டும் ஹாரி புரூக்கும் நிலைமையை மாற்றினார்கள். ரூட் ஓரளவு நிதானமாக விளையாட, வழக்கம்போல அதிரடியாக விளையாடினார் 24 வயது ஹாரி புரூக். ரூட் 122 பந்துகளில் அரை சதமெடுத்தார். புரூக், 107 பந்துகளில் சதமடித்தார். பிறகு 145 பந்துகளில் 150 ரன்களை எடுத்து நாள் முழுக்க பவுண்டரிகளாக அடித்துக்கொண்டிருந்தார். ரூட், 182 பந்துகளில் சதமடித்தார்.
இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தைத் தொடர முடியாமல் போனது. இதனால் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது. ஹாரி புரூக் 184, ரூட் 101 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
குறைந்த ரன்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்த பிறகும் வழக்கம்போல வேகமாக ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்த மற்றொரு நாள் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.