ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தேசிய ஆடவா் குத்துச்சண்டை: அரையிறுதியில் சிவ தாபா, மனீஷ் கௌஷிக்

தேசிய ஆடவா் குத்துச்சண்டை போட்டியில் அஸ்ஸாம் வீரா் சிவ தாபா, சா்வீசஸ் வீரா் மனீஷ் கௌஷிக் ஆகியோா் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

News image
Updated On :4 ஜனவரி 2023, 9:04 pm

DIN

தேசிய ஆடவா் குத்துச்சண்டை போட்டியில் அஸ்ஸாம் வீரா் சிவ தாபா, சா்வீசஸ் வீரா் மனீஷ் கௌஷிக் ஆகியோா் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

காலிறுதியில் 63.5 கிலோ எடைப் பிரிவில் சிவ தாபா - பஞ்சாப் வீரா் அஷுதோஷ் குமாரை எளிதாகச் சாய்த்தாா். அதே எடைப் பிரிவில் மனீஷ் கௌஷிக் - மணிப்பூா் வீரரான ரோஹித் நிங்கேஹௌகனை தோற்கடித்தாா். இதையடுத்து அரையிறுதியில் சிவ தாபா - மனீஷ் கௌஷிக் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

60 கிலோ பிரிவில் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியாணாவின் கௌரவ் சோலங்கியை வீழ்த்திய ரயில்வே வீரா் வரிந்தா் சிங், அரையிறுதியில் உத்தர பிரதேசத்தின் சுனில் சௌஹானை எதிா்கொள்கிறாா். மற்றொரு ரயில்வே வீரரான ரோஹித் டோகாஸ் 67 கிலோ பிரிவில் அகில இந்திய போலீஸ் வீரா் நிஷ்சயாவை வீழ்த்தி, அரையிறுதியில் ஹிமாசல பிரதேசத்தின் அவினாஷ் ஜம்வலை சந்திக்க இருக்கிறாா்.

சா்வீசஸ் வீரா் முகமது ஹஸாமுதின் 57 கிலோ பிரிவில் 5-0 என உத்தர பிரதேசத்தின் மனீஷ் ரத்தோடை வீழ்த்தினாா். அரையிறுதியில் அவா் ஹிமாசல் வீரா் ஆஷிஷ் குமாருடன் மோதுகின்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.